மழை வேண்டி 1,008 விளக்கு பூஜை
ADDED :2361 days ago
குன்றத்துார்: மழை வேண்டி, குன்றத்துார் நகைமுக வள்ளி சமேத கந்தழீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
குன்றத்துாரில், நகைமுக வள்ளி சமேத கந்தழீஸ்வரர் கோவில் உள்ளது. பருவமழை பெய்யாததால், இந்தாண்டு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், மழை வேண்டியும், உலக சமாதானத்திற்காகவும், இக்கோவிலில், நேற்று முன்தினம் மாலை, 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.குன்றத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி, சிறப்பு பூஜைகளை செய்தனர்.மேலும், வீட்டில் பூஜைகள் செய்வது, சுவாமியை எந்த முறையில் வணங்க வேண்டும் என்பது குறித்து, பெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.