உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதவாடி கோவிலில் மழை வேண்டி பூஜை

கோதவாடி கோவிலில் மழை வேண்டி பூஜை

 கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி பத்ராகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.கோதவாடி குளம் அருகேயுள்ள, பத்ரகாளியம்மன் கோவிலில், கோதவாடி, குருநெல்லிபாளையத்தை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள், கடந்த ஒரு  மாதமாக மழை வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.நேற்று முன் தினம் நிறைவு பூஜையாக, அம்மன்னுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், எலும்பிச்சை, சந்தனம், குங்குமம் போன்ற பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது.அம்மன்னுக்கு சிறப்பு  அலங்காரம் செய்து,தீபராதணை காண்பிக்கப்பட்டது. பிரசாதம்மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !