உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீ மிதி திருவிழா

தீ மிதி திருவிழா

 ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, பென்னலுார்பேட்டை அருகே உள்ளது வெலமகண்டிகை கிராமம். இங்கு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.


இக்கோவிலில், ஒவ்வோர் ஆண்டும், வைகாசி மாதம், 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது  வழக்கம்.இந்தாண்டு, 29ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, கலச ஸ்தாபனம், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்படும்.காலை, சகஸரநாமப் பாராயணமும்,  பகல், 11:00 மணிக்கு, பஜனை நிகழ்ச்சியும் நடைபெறும். மதியம், 2:00 மணிக்கு, அரிகதாகானம் நடைபெறும்.விழாவின், முக்கிய நாளான, வரும், 4ம் தேதி, தீ மிதி திருவிழா நடைபெறும். இதில், திரளான பக்தர்கள் தீ மிதிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !