வைகாசி அமாவாசை: அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம்
ADDED :2627 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, 28வது ஆண்டாக மஹா அபிஷேகம் நடந்தது.இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்திக்கு, பால், நெய், தேன், பஞ்சாமிர்தம், மூலிகை பொடி, பூக்கள், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபி ஷேகங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.