பென்னாகரம் மழை வேண்டியும், வேளாண்மை செழிக்கவும் அம்மனுக்கு வழிபாடு
ADDED :2361 days ago
பென்னாகரம்: பென்னாகரம் அருகே மழை வேண்டியும், வேளாண்மை செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், மழை வேண்டியும், வேளாண்மை செழிக்கவும், கடந்த மூன்று நாட்களாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு மண் பானையில் கூழ் காய்ச்சி படைக்கப்பட்டது. அன்று இரவு, தேசத்து மாரியம்மனுக்கு சந்தி கலி செய்து படையலிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜூன்., 2ல்) காலை வடகல் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, மாவிளக்கு கொண்டு வந்து வழிபட்டனர். சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தனர்.