உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

குளித்தலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

குளித்தலை: கரூர் அருகே, முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பால் குட ஊர்வலம் நடந்தது. குளித்தலை அடுத்த, ஏ.நடுப்பட்டி முத்துமாரியம்மன்கோவில் திருவிழாவை யொட்டி, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்த குடம் எடுத்து வந்தனர். இரவு கரகம் பாலித்தல், சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை நடந்தது. இன்று (ஜூன்., 3ல்) காலை
பொங்கல் வைத்தல், தீ மித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை (ஜூன்., 4ல்), மஞசள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !