நாமக்கல், வைகாசி கிருத்திகை நாள் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நாமக்கல்: நாமக்கல்லில், வைகாசி கிருத்திகை நாள் விழா கொண்டாட்டம் முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று (ஜூன்., 2ல்) வைகாசி கிருத்திகை நாள் வெகு விமரிசையாக நடந்தது. நேற்று (ஜூன்., 2ல்) காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து
முத்தங்கி சாற்றப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம், மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜா அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த
ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.