கீழக்கரையில் லைலத்துல் கத்ரு இரவு நிகழ்ச்சி
கீழக்கரை:புனித லைலத்துல் கத்ரு இரவு சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஜூன்., 1ல்) இரவு முதல் அதிகாலை 3:30 மணிவரை சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
ராம்ஜான் மாதத்தில் புனித திருக்குரான் 27ம் நாளில் பூமியில் இறக்கப்பட்டதாகும். அதனை நினைவு கூறவும், உலக மக்களின் நன்மைக்காகவும், சிறப்பு துஆ ஓதப்பட்டது. ஆண்கள்
பள்ளிவாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும் நள்ளிரவு முதல் தொழுகையில் ஈடுபட்டனர். கீழக்கரை நடுத்தெரு ஜும் ஆ மஸ்ஜித்தில் லைலத்துல் கத்ரு இரவு சிறப்பு நிகழ்ச்சியில்
டவுன் காஜியும், அனைத்து ஜமாஅத் ஷரீஅத்வழிகாட்டு குழுத்தலைவர் காஜியார் காதர்பக்ஸ் உசேன் சித்திகீ தலைமை வகித்தார்.ஜும் ஆ மஸ்ஜித் பரிபாலனக் கமிட்டி தலைவர்டாக்டர் கியாதுதீன் முன்னிலை வகித்தார். முன்னதாக தராவீஹ் தொழுகையில் திருக்குரான் ஓதி நிறைவு செய்யப்பட்டது.சகர் உணவு வழங்கப்பட்டது. பெரியபட்டினம், மேலப்புதுக்குடி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, ஒப்பிலான், கடலாடி உள்ளிட்ட ஏராளமான பள்ளிவாசல்களில் இரவு முழுவதும் மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.