விஸ்வநாத சுவாமி கோயில் வைகாசி விழா துவங்கியது
ADDED :2315 days ago
சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு கொடிமரத்திற்கு தயிர், பால், பஞ்சாமிர்தம், இளநீர் , சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது.தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் விஸ்வநாதர் விசாலாட்சிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற நாளிலிருந்து தொடர்ந்து 11 நாட்கள் விழா நடைபெறும். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் என ஒவ்வொரு நாளும் சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். 9 ம் நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.