மயிலத்தில் அமாவாசை ஜோதி தரிசனம்
ADDED :2418 days ago
மயிலம்: திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் வைகாசி மாத அம்மாவசையை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.அதனையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், குருபகவான், வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.பகல் 12:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் கோவிலில் ஜோதி காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.