உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ரகூத்தமர் கோவிலில் சோமவார அமாவாசை

திருக்கோவிலூர் ரகூத்தமர் கோவிலில் சோமவார அமாவாசை

திருக்கோவிலூர்: சோமவார அமாவாசையை முன்னிட்டு திருக்கோவிலூர் ரகூத்தமர் கோவிலில் உள்ள அரசமரத்தில் ஏராளமான பக்தர்கள் வலம் வந்து வழிபட்டனர்.திங்கட்கிழமை வரும் அமாவாசை தினத்தை சோமவார அமாவாசை என அழைப்பது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பு வாய்ந்ததாகும். அத்துடன் அரச மரத்தை வலம் வந்து நாகலிங்கத்தை வழிபடுவதும் வழக்கம். அவ்வாறு வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.நேற்று (ஜூன்., 3ல்) சோமவார அமாவாசை என்பதால், திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ரகூத்தமர் கோவிலில் உள்ள அரசமரத்தில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வலம் வந்து நாகலிங்கத்தை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !