செஞ்சி சிங்கவரத்தில் ரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா
ADDED :2417 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நாளை (ஜூன்., 5ல்) திருத்தேர் உற்சவம் நடக்கிறது. செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 3ம் தேதி கருட சேவை நடந்தது. இன்று 4ம் தேதி இரவு யானை வாகனமும், நாளை முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை அறநிலைத்துறையினர், உபயதாரர்கள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.