சேலம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் பெருவிழா
ADDED :2315 days ago
சேலம்: சேலம், சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில், பங்கு பெருவிழா, பாப்புலர் மிஷன் தியானம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. சேலம், சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில், பங்கு பெருவிழா, பாப்புலர் மிஷன் தியானத்தை, போதகர் டேவிட் கொடியேற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். ஆலய பங்கு தந்தை அருளப்பன் சிறப்பு திருப்பலியை நடத்தினார். நேற்று முன்தினம் (ஜூன்., 2ல்) துவங்கி, வரும், 7 வரை தினமும் காலை, மாலையில் சிறப்பு ஜெபவழிபாடு, தியானம், விவிலிய ஆராதனை ஆகியன நடக்கிறது. 9ல், திருவிழா திருப்பலி, உறுதி பூசுதல் வழங்கும் விழா, சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நடக்கிறது.