உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பென்னலூர் சிவன் கோவில் சீரமைப்பு பணி போதிய நிதி இல்லாமல் முடக்கம்

பென்னலூர் சிவன் கோவில் சீரமைப்பு பணி போதிய நிதி இல்லாமல் முடக்கம்

பென்னலூர்: பென்னலூர் கிராமத்தில், பழமையான சிவன் கோவில் புனரமைப்பு பணி, போதிய நிதி இல்லாமல் முடங்கிஉள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில், பழமைவாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், பராமரிப்பின்றி, இடிந்து விழுந்து, புதர்மண்டி காணப்பட்டது.

கிராம மக்கள், சிவனடி யார்கள் நன்கொடையுடன், கோவிலை புனரமைக்கும் பணி, 2017ம் ஆண்டு துவங்கியது.கோவில் மண்டப கோபுரம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, நடக்க வேண்டிய பணிகளுக்கு, நிதி இல்லாததால், பல மாதங்களாக புனரமைப்பு பணி கிடப்பில் உள்ளது.இது குறித்து, கோவில் புனரமைப்பு குழுவினர் கூறியதாவது: சிவனடியார்களின் சொந்த செலவில், இந்த கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மூன்று நிலை ராஜகோபுரம், அம்மன் சன்னிதி, சண்டிகேஸ்வரர் சன்னிதி கட்டுமானப் பணிக்கு நிதி இல்லாமல் தவித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !