உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் கிருத்திகை விழா பக்தர்கள் பிரார்த்தனை

திருப்போரூரில் கிருத்திகை விழா பக்தர்கள் பிரார்த்தனை

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிருத்திகை விழாவில், பக்தர்கள், பிரார்த்தனை யை நிறைவேற்றினர்.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப் படுகிறது.அந்த வகையில், வைகாசி மாத கிருத்திகை விழா, நேற்று முன்தினம் (ஜூன்., 2ல்) நடந்தது.

இதையொட்டி, அதிகாலை, 3:00 மணி துவங்கி,ஆயிரக்கணக் கான பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடினர். நீண்ட வரிசையில் நின்று, கந்தனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின், காது குத்தல், எடைக்கு எடை துலாபாரம், காவடி எடுத்தல் என, தங்கள் வேண்டுதல் களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !