வைதிகத்தேரில் வீரபத்திரர்
ADDED :2362 days ago
சிவபெருமானைப்போலவே சிவகுமாரரான வீரபத்திரரின் வாகனமும் இடப வாகனமே. வேட்டையாடுவதும் போர் புரிவதும் வீரபத்திரரின் விருப்பமானச் செயல்கள் என்பதால், குதிரையும் வாகனமாக உள்ளது. அனுமந்தபுரம் கோயிலில், வேட்டைவிழாவின் போது வீரபத்திரர் குதிரை வாகனத்திலேயே பவனி வருகிறார். தேர், பூதம் போன்ற வாகனங்களும் இவருக்கு உண்டு. வீரபத்திரரின் தேர் "வைதிகத் தேர் எனப்படுகிறது.