உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீத கிருஷ்ணன் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்

நவநீத கிருஷ்ணன் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்

தேவிபட்டினம்:தேவிபட்டினம் அருகே அழகன்குளம் ராதா ருக்மணி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

தேவிபட்டினம் அருகே அழகன்குளம் யாதவ உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிேஷக விழா நாளை (ஜூன் 6) நடக்கிறது. கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வரர் வழிபாடு நிகழ்த்தப்பட்டு, நேற்று காலை சுப்பரபாதம் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை ேஹாமங்கள் நடத்தப்பட்டு, மாலையில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணமும், தொடர்ந்து திவ்ய பிரபந்தமும் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(ஜூன் 5) காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் ேஹாமங்களும் நடக்கின்றன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்வும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து நாளை காலை 8:30 மணிக்கு ராதா ருக்மணி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமிக்கு கும்பாவிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அழகன்குளம் யாதவ உறவின்முறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !