திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :2421 days ago
சிதம்பரம் : திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் பாரதி தெருவிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலின், வைகாசி பெருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 31ம் தேதி அரவாண் களபலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், பொது மக்கள் செய்திருந்தனர்.