ஆர்.எஸ்.மங்கலம் தேர்பவனி விழா
ADDED :2318 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே வல்லமடை உலக ரட்சகர் ஆலய தேர்பவனி விழா மே 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் சிறப்பு திருப்பலியும், வாண வேடிக்கைகளும் நடந்தன. முக்கிய விழாவான தேர்பவனி விழாவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலா வந்த செபஸ்தியாரை பெண்கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.