உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை உச்சி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

உடுமலை உச்சி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

உடுமலை:உடுமலை அணிக்கடவு உச்சிமாகாளியம்மன் கோவிலில் நாளை (ஜூன்., 6ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது.உடுமலை அருகே அணிக்கடவு, நஞ்சேகவுண்டன்புதூரில் செல்வவிநாயகர், உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. பன்னெடுங்காலமாக இருந்து வந்த இக்கோவிலில் சிற்ப சாஸ்திர முறைப்படி புதிதாக கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபங்கள், புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன்., 4ல்) விநாயகர் பூஜை, கணபதி ஹோமத் துடன் துவங்கியது.விழாவில் இன்று (ஜூன்., 5ல்) இரண்டாம் கால யாக வேள்வியும், மாலை யில், லலிதா சகஸ்ரநாமம், எண்வகை மருந்து சாத்துதலும், இரவு, வள்ளி கும்மியாட்டமும் நடைபெறுகிறது.

நாளை (ஜூன்., 6ல்) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், காலை, 10:30 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், தொடர்ந்து செல்வவிநாயகர், உச்சி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடக்கிறது.பின்பு மகாஅபிஷேகமும், கோமாதா பூஜை, அன்னதானமும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், நஞ்சேகவுண்டன்புதூர், அணிக்கடவு ஊர்ப்பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !