உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

திருப்பூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

திருப்பூர்: அனைத்து பகுதிகளிலும் இன்று (ஜூன்., 5ல்) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சவூதியில் நேற்று (ஜூன்., 4ல்) ரம்ஜான் பிறை தெரிந்ததையடுத்து அங்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினர்.அவ்வகையில், திருப்பூரில் ஒரு பிரிவினர் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.திருப்பூர் மாவட்ட ஜம்இயத் அஹ்லில் குரான் வல்ஹதீஸ் அமைப்பு சார்பில் செல்லாண்டியம்மன் துறை அருகே டிட்டி வளாகத்தில் தொழுகை நடந்தது.மாவட்ட தலைவர் ஜப்ருல்லா தலைமை வகித்தார். மவுலவி இக்பால் சிறப்புரையாற்றினார். இதில் ஆண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்றனர்.தொழுகைக்கு பின், இதில் பங்கேற்றோர் ரம்ஜான் வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !