நத்தம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை பூஜை
ADDED :2622 days ago
நத்தம்:நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், மஞ்சள்நீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.