வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம்
ADDED :2320 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று 5 ம்தேதி அம்மன் திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை அம்பாள் பெரியநாயகி அம்மன் திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.விழாவையொட்டி காலை 6:00மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, புதிய திருத்தேர் வடம் பிடித்து வெள்ளோட்டம் துவங்கியது.விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், உபயதாரர்கள் தண்டபாணி, தொழிலதிபர்கள் சந்திரசேகர், சபாபதி, வியாபாரிகள் சங்க செயலர் ராஜேந்திரன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 14 ம்தேதி பிரம்மோற்சவம் திருத்தேர் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.