உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னூர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னூர்:அல்லிக்காரம்பாளையம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 5ல்) நடந்தது.

அல்லிக்காரம்பாளையத்தில், பழமையான சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், புதிதாக கன்னி மூல விநாயகர், பாலமுருகன், நடன விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை சிலைகள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன.

நேற்று (ஜூன்., 5ல்) காலை, 6:30 மணிக்கு விமான கலசம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், அலங்கார பூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்கினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !