உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி செலக்காரப்பன் கோவில் திருவிழா

தர்மபுரி செலக்காரப்பன் கோவில் திருவிழா

தர்மபுரி: தர்மபுரி அருகே, பழைமை வாய்ந்த செலக்காரப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

தர்மபுரி அடுத்த, டாக்டர் தர்மலிங்கம் சாலையில் உள்ள, ஸ்ரீ செலக்காரப்பன் உடனுறை திலகாம்பிகை கோவிலில், நேற்று முன்தினம் (ஜூன்., 4ல்), காலை, 9:00 மணிக்கு
கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. நேற்று (ஜூன்., 5ல்) காலை, மதிகோன்பாளையம், ஆலங்கரை, குப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.

பெண் பக்தர்கள், கோவிலுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பின், பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !