தர்மபுரி ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
தர்மபுரி: இஸ்லாமிய சமுதாய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை, நாடு முழுவதும் நேற்று (ஜூன்., 5ல்) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில், நேற்று (ஜூன்., 5ல்) காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து வந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டர். பின், ஏழை, எளியோருக்கு, பணம், உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். தர்மபுரி அடுத்த டேக்கீஸ் பேட்டையில் உள்ள மசூதியில், நேற்று (ஜூன்., 5ல்) இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். இதேபோல், காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிகளில் உள்ள மசூதிகளில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நேற்று (ஜூன்., 5ல்) சிறப்பு தொழுகை நடந்தது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, ஓசூர், தளி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள
இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் கொண்டாடினர். கிருஷ்ணகிரி ராஜிவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ்பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா
மைதானங்களில் நேற்று (ஜூன்., 5ல்) காலை, 9:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. அதே போல, கிருஷ்ணகிரி பெரியார் நகரில் உள்ள மசூதியில், பெண்களுக்கு மட்டும் சிறப்பு தொழுகை நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர். வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.