உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருள்கிறார்!

திருக்கோவிலூர் பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருள்கிறார்!

திருக்கோவிலூர் :கடலூர் மாசிமக தீர்த்தவாரியில் கலந்து கொண்ட திருக்கோவிலூர் தேகளீச பெருமாள் இன்று ஆஸ்தானம் எழுந்தருள்கிறார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உற்சவ மூர்த்தியான தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கடந்த 3ம் தேதி திருக்கோவிலூரில் இருந்து கடலூர் புறப்பட்டார். பாதம் தாங்கிகளில் புறப்பட்டு, 8ம் தேதி கடலூர் தேவனாம்பட்டினம் கடற் கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்டார். இதனையடுத்து அங்கிருந்து ஆஸ்தானம் புறப் பட்டு, 14 நாட்களுக்கு பிறகு இன்று மாலை ஆஸ் தானம் வந்தடைகிறார். இரவு 9 மணி அளவில் பெரிய கோபுரத்தில் மன வாள மாமுனிகள் பெருமாளை எதிர் கொண்டு அழைக்க சிறப்பு மேளதாளங்களுடன் ஆஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ னிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !