புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2352 days ago
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் ஒலக்கூர் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன்., 7ல்) நடந்தது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட, கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட, பூரணி பொற்கலை உடனுறை ஒலக்கூர் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (ஜூன்., 6ல்) காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று (ஜூன்., 7ல்) காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8.00 மணிக்கு கடம் புறப்பாடாகி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.