பெரியகுளம் அருகே காமாட்ஷி அம்மன் கும்பாபிஷேகம்
ADDED :2421 days ago
பெரியகுளம்:வடுகபட்டி, சேடபட்டியில் விஸ்வகர்ம சமுதாய மக்கள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் சார்பில் காமாட்ஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி மூன்று நாட்கள் யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தில் சிவாச் சாரியார்கள் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் தலைவர் ராசு, செயலாளர் ஜானகிராமன், பொருளாளர் மாரிச்சாமி , உறுப்பினர்கள் செய்தனர்.