நத்தம் அருகே முத்தாலம்மன் கோயில் விழா
ADDED :2353 days ago
நத்தம்:நத்தம் அருகே இடையபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. இரு நாட்கள் கொண்ட விழாவில் முதல் நாள் இரவு அம்மன் கண்திறப்பு நடந்தது. ஊர்மந்தையில்
அலங்காரத்துடன் எழுந்தருளிய அம்மன் அதிகாலை வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கோயிலை அடைந்தார்.தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து கிடா வெட்டு மற்றும் சிறப்பு
பூஜைகள் நடந்தது. மாலை மேளதாளத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.