எரியோடு மணியகாரன்பட்டியில் மாலை கும்பிடு விழா
ADDED :2353 days ago
எரியோடு:எரியோடு மணியகாரன்பட்டியில் பாப்பம்மன் மாலைக் கோயில் கும்பிடு விழா நடந்தது.தாயாதிகள் பொங்கல் கூடையுடன் கோயில் வீடு வந்து பின்னர் அங்கிருந்து
ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
மூங்கில் கூடையில் அபிஷேக பொருட்களை கோயில் பொறுப்பாளர்கள் சுமந்தபடி மேள தாளத்துடன் கொண்டு வந்தனர். கோயிலில் தலைகட்டுதாரர்கள் அனைவரும் பொங்கல் வைத்து பாப்பம்மன், சவடம்மன், சிக்கம்மன், மாரஜ்ஜியம்மன், தாத்தப்பன் தெய்வங்களை வழிபட்டனர்.
கும்பிடு வாங்குதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாட்டினை கோயில் தலைவர் சவடப்பன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மாதவன்
குழுவினர் செய்திருந்தனர்.