ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் ஹோமத்துக்கு முன்பதிவு துவக்கம்
ADDED :2353 days ago
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் திருநட்சத் திரத்தை முன்னிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை ஸ்ரீமஹா சுதர்சன ஹோமம் நடக்கிறது. உலக நன்மை, குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட அறம் சார்ந்த வாழ்க்கை அருளக்கூடிய இந்த ஹோமம், ஜூலை, 8ல் தொடங்கி, 10 வரை நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தில், 200 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். நேற்று (ஜூன்., 7ல்) முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஹோமம் நிறைவு நாளில், ரசீதை கோவிலில் ஒப்படைத்து, ஹோம சிறப்பு பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம் என்று, கோவில் செயல் அலுவலர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.