உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓமலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஓமலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஓமலூர்: காடையாம்பட்டி, தும்பிப்பாடியில், பழமையான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 3ல், முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று (ஜூன்., 7ல்) காலை, 8:00 மணிக்கு, மூலஸ்தானம், ராஜகோபுரத்துக்கு, ஒரே நேரத்தில், புனித நீரூற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின், அன்னதானம் நடந்தது. விழாவையொட்டி, பெரிய மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு, கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், திரளான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !