கண்டாச்சிபுரம் சத் சங்கத்தில் ஜோதி தரிசனம்
ADDED :2354 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் பூசத்தையொட்டி திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.
கண்டாச்சிபுரம் சத் சங்கத்தில் பூசத்தையொட்டி, நேற்று (ஜூன்., 7ல்) காலை 10:00 மணிக்கு அகவல் பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஓதுவார்கள் திருஅருட்பா பாடல்களைப் படினர். தொடர்ந்து 12:00 மணிக்கு திரை நீக்கி ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.பின்னர் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்சங்க செயலர் வசந்தராயன் செய்திருந்தார்.