கள்ளக்குறிச்சி நிறைமதி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :2354 days ago
கள்ளக்குறிச்சி: நிறைமதி பெருமாள் கோவிலில் 9வது ஆண்டு கும்பாபிஷேக துவக்க விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. நூறாண்டு பெருமை கொண்ட இக்கோவிலில் கிராம மக்கள் சார்பில் ஒருகால பூஜை
நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோவிலின் கும்பாபிஷேகம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. 9வது ஆண்டு துவக்க நாள் ஆண்டு விழா நேற்று முன்தினம் (ஜூன்., 6ல்)நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் (ஜூன்., 6ல்) இரவு கலச ஸ்தாபனம் செய்து, மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு
அபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கலசாபிஷேகம் நடத்தி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.