திருப்பரங்குன்றத்தில் தங்கரதம் வெள்ளோட்டம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கரதம் பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று (ஜூலை 9ல்)வெள்ளோட்டம் நடந்தது. இக்கோயிலில் தினம் இரவு 7:00 மணிக்கு தங்கரதம் உலா வந்தது. தங்கரதம் இழுக்க பக்தர்கள் 2 ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் ஆண்டுக்கு ஒருநாள் தாங்கள் விரும்பிய நாளில் தங்கரதம் இழுக்க 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்தி உள்ளனர். இந்த தங்க ரதத்தில் சேதமடைந்த பொம்மைகள் 2 நாட்களாக சீரமைக்கப்பட்டது.
பணிகள் நிறைவடைந்து நேற்று (ஜூலை 9ல்) வெள்ளோட்டம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கரதத்தில் எழுந்தருளினர். கோயில் ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், ரமேஷ்சொக்குசுப்பிரமணியம், ஷண்முகசுந்தரம் பூஜைகள் செய்தனர்.துணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம், பஷேகார் நெடுஞ்செழியன், மணியம் புகழேந்தி பொறியாளர் ராமன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். திருவாட்சி மண்டபத்தை சுற்றிதங்க ரதம் உலா வந்தது.
துணை கமிஷனர் மாரிமுத்து: இன்று (ஜூøல் 10)முதல் தங்க ரதம் உலா நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா காலங்கள் தவிர தங்க ரதம் இழுக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
ஆண்டுக்கு ஒருமுறை இழுக்க வைப்புத் தொகை செலுத்தியவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். என்றார்.