உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணவாள நகர் நாகாத்தம்மன் கோவிலில் ஜாத்திரை

மணவாள நகர் நாகாத்தம்மன் கோவிலில் ஜாத்திரை

மணவாள நகர்:மணவாள நகர், நாகாத்தம்மன் கோவிலில், 29ம் ஆண்டு, ஜாத்திரை நடந்தது.
திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ளது நாகாத்தம்மன் கோவில். இங்கு, ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஜாத்திரை நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டிற்கான, 29ம் ஆண்டு, ஜாத்திரை, 7ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.பின், அன்று, காலை, 9:00 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து, நாகாத்தம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை ஊர்கூடி பொங்கல் வைத்தலும் நடந்தது.விழாவின் முக்கிய நாளான, நேற்று (ஜூலை 9ல்), காலை, 8:00 மணிக்கு அடிதண்டம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், முள் குத்துதல் என, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

அதை தொடர்ந்து, மதியம், 1:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், தாய் வீட்டு சீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.இரவு, நாகாத்தம்மன் மலர் அலங்காரத்தில் வீதி
உலாவும் நடந்தது. ஜாத்திரை, 16ம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !