மாமல்லபுரம் கடற்கரை சிற்பங்கள் சீரழிவிலிருந்து பாதுகாக்கப்படுமா?
மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் உள்ள சிறிய சிற்பங்கள், பாதுகாக்கப்படாமல் சீரழிகின்றன.கி.பி., 7ம் நூற்றாண்டில், துறைமுகப்பட்டினமாக விளங்கிய
மாமல்லபுரத்தில், பல்ல வர்கள், பாறைகளை செதுக்கி, சிற்பங்கள், குடைவரை மண்டபங்கள் படைத்தனர்.
இவ்வாறு படைத்த, கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை, தொல்லியல் துறை பராமரித்து, பாதுகாக்கிறது. எனினும், கடற்கரைப் பகுதியில்
உள்ள, சிறிய சிற்பங்களை பாதுகாக்காததால், அவை சீரழிகின்றன.கடற்கரை கோவில் வளாக வடபுறத்திற்கு வெளியே, சிறிய பாறையில், துர்க்கையுடன், மகிஷாசுரமர்த்தினி சிற்பம் உள்ளது.
கடற்கரை கோவிலுக்கு, 300 மீ., தெற்கில், கடற்கரை மணல்வெளியில், சிறிய குன்றுகளில், புலிக்குகை தோற்ற சிற்பங்கள் உள்ளன.இதில், ஒரு பாறை, கருவறை தோற்றத்திலும், மற்றது சிங்க தோற்றத்திலும், உட்புறம் கொற்றவை சிற்பத்தில் உள்ளது. மற்றொரு பாறை, இந்திரன் கருவறையாக உள்ளது. மேற்கண்ட சிற்பங்கள், உரிய பராமரிப்பின்றி, பாதுகாப்பின்றி இருக்கின்றன.
மகிஷாசுரமர்த்தினி சிற்ப பகுதியை, கடற்கரைக்கோவில் பகுதிக்கேற்ப உயர்த்தி, கடல் சூழாமல் பாதுகாக்க, தடுப்பு அமைக்க முடிவெடுக்கப்பட்டது.புலிக்குகை தோற்ற
சிற்பங்களுக்கும் தடுப்பு அமைக்க, துறை தலை மையகத்தில், தொல்லியல் அதிகாரிகள் பரிந்துரைத்தும், நடவடிக்கை இல்லாமல் தாமதமாகிறது.தொல்லியல் துறை நிர்வாகம், சிறிய
சிற்பங்களையும் பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.