உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை

செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை

செஞ்சி:செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத ராம பஜனை நடந்தது.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோதண்டராமர் கோவிலில் வைகாசி மாத ராம பஜனை நேற்று முன்தினம் (ஜூன்., 8ல்)நடந்தது.அதனையொட்டி, கோதண்டராமருக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். 9:00 மணிக்கு பஜனை, 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார்.அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். சபை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன் பஜனை நடத்தினார்.

நிர்வாகிகள் எட்டியாப்பிள்ளை, சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்பு, ராமு, ராமசாமி உபயதாரர் பன்னீர் செல்வம் மற்றும் பஜனை கோஷ்டியினர் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !