உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகில் யாரும் தனியாள் இல்லை

உலகில் யாரும் தனியாள் இல்லை

* உலகில் யாரும் தனியாள் இல்லை. எப்போதும் கடவுள் உன்னுடன் இருக்கிறார்.
* உன்னிடம் உள்ள பக்தி உணர்வு ஒன்றே உண்மையான உதவி.
* நேர்மையுடன் நடப்பவருக்கு கடவுள் மகிழ்ச்சி என்னும் பரிசை வழங்குவார்.
* அன்பு இல்லாதவன் செய்யும் வழிபாடு பகல் வஷேம் அன்றி வேறில்லை.        
* முடிந்தால் விட்டுக்கொடு; மற்றவர் துயரம் போக்க உதவிக்கரம் நீட்டு.  
* எந்த சூழலிலும் நிதானத்தை இழக்காதே! விவேகமுடன் செயல்படு.
* நம்பிக்கை இல்லாமல் எந்த மருந்து சாப்பிட்டாலும் நோய் குணமாகாது.
* பிறருக்கு சொல்லும் புத்திமதியை, முதலில் உன் வாழ்வில் செயல்படுத்து.
* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இரு.
* ஒழுக்கத்தை உயிராக மதித்திடு. விருப்பம், எதிர்பார்ப்புக்கு இதில் இடமில்லை.
* ஆசையை விடாப்பிடியாக அடக்காதே; முன்னை விட பலமடங்கு பலத்துடன் வெளிப்படும்.
* வளைந்து கொடுக்கும் இயல்பு கொண்டவன் வாழ்வில் பின்னடைவு அடைவதில்லை.            
* நல்லதும், கெட்டதும் மாறி மாறி வரலாம். எந்நிலையிலும் பயப்படாதே. - அரவணைக்கிறார் ஸ்ரீ அன்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !