இரண்டு பிரபலங்கள்
ADDED :2348 days ago
இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரே அஷ்டதிக்கு பாலகர்கள். இவர்களில் இந்திரனை வழிபட்டால் செல்வவளம் உண்டாகும். அக்னியை வழிபட்டால் தோற்றப்பொலிவு சிறக்கும். எமனை வழிபட்டவர்க்கு தீவினை அகலும். நிருதியை வேண்டிக்கொண்டால் பகைவர் பயம் நீங்கும். வருணனை வணங்கினால் நல்ல மழை பொழியும். வாயுவை சிந்திக்க ஆரோக்கியம் கூடும். குபேரனை துதித்தால் சுகபோக வாழ்வு அமையும். ஈசானனை வணங்கினால் அஞ்ஞானம் அகலும். இந்த கலியுகத்தில், லட்சுமியோடு சேர்ந்திருக்கும் குபேர வழிபாடு மட்டுமே உருப்படியாக நடக்கிறது. எங்கோ, ஒன்றிரண்டு இடங்களில் மழைக்காக வருணஜெபம் செய்கின்றனர். எல்லா வழிபாடுகளும் உருப்படியாக நடக்க ஆன்மிக அமைப்புகள் முயற்சித்தால் நல்லது.