உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் முத்துமாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது

கடலூர் முத்துமாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது

கடலூர்:சுப்புராயலு நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி, யாகசாலை பூஜைகள் நேற்று (ஜூன்., 11ல்) இரவு துவங்கியது.கடலூர், சுப்புராயலு நகர், முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, மகாகும்பாபிஷேகம் நாளை (13ம் தேதி) நடக்கிறது. இதனையொட்டி நேற்று (ஜூன்., 11ல்) காலை அனுக்ஞை,கணபதி பூஜையுடன் யாக சாலை பூர்வாங்க பூஜைகள் துவங்கியது.மாலை வாஸ்து சாந்தி சிறப்புஹோமம் உள்ளிட்ட பல சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று, இரவு 9 மணிக்கு முதலாம் யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !