அன்னூர் செல்வ விநாயகருக்கு 20ல் கும்பாபிஷேகம்
ADDED :2315 days ago
அன்னூர்: அன்னூர், சிறுமுகை ரோடு, கவுண்டம்பாளையத்தில், செல்வ விநாயகர், மாகாளியம்மன், நாகராண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும், 19ம் தேதி துவங்குகிறது. மாலையில் புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், விநாயகர் வழிபாடு, யாகசாலை பிரவேசம், எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 20ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால வேள்வியும், காலை 9:30 மணிக்கு செல்வ விநாயகர், மாகாளியம்மன், நிகராராண்டவர் மற்றும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
பின்னர் அலங்கார பூஜை, நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.