உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் நன்மை

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுக்கிரனால் நன்மை

இந்த மாதம் கூடுதல் நற்பலனை எதிர்பார்க்கலாம் காரணம் சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். முக்கிய கிரகங்களில் 3ல் இருக்கும் ராகு  தொடர்ந்து நன்மை தருவார்.  சுக்கிரன் ஜூன் 29ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய்  ஜூன்24 வரை மிதுனத்தில் இருந்து முன்னேற்றம் கொடுப்பார். அதன் பிறகு கடகத்திற்கு மாறுவதால் நன்மை குறையும்.

குரு 8ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அவர் மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்.

வீண்விரோதத்தை உருவாக்குவார். ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.  

குடும்பத்தில் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. ஜூன் 29க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.


ஜூன் 27,28,29ல்  பெண்கள்  உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 2,3ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன் 22,23,24ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்கள் சிறப்பான பலன் பெறுவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூன் 29க்குள் கேட்டு பெறவும்.  சுக்கிரனால் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவியும் தேடி வரும். ஜூன் 20,21 சிறப்பான நாளாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில்  லாபம் அதிகமாக இருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் அடைவர். சுக்கிரனால்  ஜூன் 29 வரை அரசின் சலுகை கிடைக்கும். அதன் பின் புதனால் அரசு வகையில் பிரச்னை வரலாம். சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். ஜூலை 8,9ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான பலன் அடைவர்.  சமூகநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தை பெறுவர்.

மாணவர்கள் சீரான  வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது. புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் சிரத்தை எடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் கிடைக்கப் பெறலாம். குறிப்பாக நெல்,கோதுமை, சோளம், மானாவாரி பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்கும்.  கறுப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. ஜூன் 24க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவீர்கள். கணவனின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் பற்றி பேச்சு விரையில் பூர்த்தியாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

* நல்ல நாள்: ஜூன் 20,21,22,23,24,27,28,29, ஜூலை 3,4,8,9,10,11,12
* கவன நாள்: ஜூன் 16,17, ஜூலை 13,14
* அதிர்ஷ்ட எண்: 1,9  
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்
● வெள்ளியன்று துர்கை வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு அபிேஷகம்
● புதன் பகவானை வழிபட்டு நெய்தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !