உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மாரியம்மன் கோவி லில், பக்தர்கள் அலகு குத்தி, தேர் இழுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும், வைகாசி மாதத்தில் விசாகத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த மாதம், 24 ம் தேதி விநாயகர் சாட்டுதலுடன் விழா துவங்கியது. அன்றாடம் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த, 11 ம் தேதி பூவோடு எடுத்தல், சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று முன்தினம் காலை அம்மன் அழைப்பு, அலங்கார பூஜை, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.மாலை பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பறவை காவடி நிகழ்ச்சியும் நடந்தன. இன்று மறுபூஜை மற்றும் வசந்த விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !