உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டுக்காளியம்மன் கோயில் பொங்கல் விழா

மண்டுக்காளியம்மன் கோயில் பொங்கல் விழா

தேவதானப்பட்டி: சில்வார்பட்டி இந்திரா காலனியில் மண்டுக்காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய்க்கு சென்று அம்மன் கரகம் அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். பொங்கல் வைத்து கிடா வெட்டப்பட்டது. பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி எடுத்து கண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.  ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !