மாணவர்கள் நன்றாக படிக்க சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை
ADDED :2364 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டி சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கல்விக்கு கடவுளான சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது. வைகாசி மாதம் வளர்பிறை தசமி நட்சத்திரத்தன்று கெஜேந்திர விமானத்துடன் கூடிய சரஸ்வதியை வணங்கினால் கல்வியில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.வளர்பிறை தசமியை முன்னிட்டு சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எழுது பொருட்களை வைத்து பூஜை செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.