பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டி மாரியம்மன் கோயிலில் கோயில் விழா
ADDED :2364 days ago
அலங்காநல்லூர்: பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டி மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி அழகர்மலை தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் காப்புகட்டி விரதம் துவக்கினர். திருவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. முளைப்பரியுடன் அம்மன் பூஞ்சோலைக்கு ஊர்வலமாக சென்று எழுந்தருளினார்.