கொட்டாம்பட்டி அருகே பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2306 days ago
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டி செல்வவிநாயகர், பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மூன்று நாட்கள் யாக சாலை பூஜைகள் நடந்தன.
நேற்று (ஜூன்., 13ல்) நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதையடுத்து புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.