மல்லசமுத்திரம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2306 days ago
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, மகா சக்தி மாரியம்மன் மற்றும் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூன்., 14ல்) நடக்கிறது.
மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா கணபதி, மகா சக்தி மாரியம்மன் கோவில்களில், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கடந்த, 12 அதிகாலை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. நேற்று (ஜூன்., 13ல்)காலை மங்கள இசை, வருண கும்ப பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலச பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, சுவாமி சிலை களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (ஜூன்., 14ல்) அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, 6:00 முதல், 7:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம், தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும்.